தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மனோஜிப்பட்டி பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய பெண் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு தயார் செய்து கொடுக்கும் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஒரு வாலிபர் அந்த பெண்ணிடம் நான் உங்களிடம் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார். பின்னர் அவரது செல்போன் எண்ணை கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு மிரட்டி சென்றுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த பெண் நடந்தவற்றை தனது உறவினர்களிடம் செல்போன் மூலம் தெரிவித்தார்.
இதனையடுத்து உறவினர்கள் அந்த பெண் இருக்கும் இடத்திற்கு சென்று செல்போன் மூலம் வாலிபரை தொடர்பு கொண்டு வருமாறு அழைத்தனர். அங்கு வந்ததும் வாலிபரை பிடித்து சரமாரியாக அடித்து தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் மோதிரப்பா சாவடி பகுதியை சேர்ந்த பிரபுதேவா என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரபுதேவாவை கைது செய்தனர்.