Categories
தேசிய செய்திகள்

உங்களின் முதலீட்டை இருமடங்காக உதவும்… தபால் துறையின் 5 சேமிப்பு திட்டங்கள்… ஜாயின் பண்ணுங்க…!!!!

வங்கிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தைப் போல, தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நல்ல லாபம் தருகிறது. ஐந்தே ஆண்டுகளில் இதில் நல்ல ரிட்டன் கிடைக்கிறது. ஐந்து ஆண்டுகள் கழித்து அசல் தொகை கிடைக்கும். எனவே நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் அந்த முதலீடு முற்றிலும் பாதுகாப்பாக இருக்க விரும்பினால், தபால் அலுவலக சேமிப்பு உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

அதேபோல முதலீடு செய்வதற்கு மிகவும் எளிமையானதாகவும் அதே நேரத்தில் நீண்ட நாட்களுக்கான சேமிப்புகளுக்கு அதிக அளவில் திட்டங்கள் இருப்பதாலும் மக்கள் தபால் நிலையங்களில் சேமிப்பு திட்டங்களை துவங்குகின்றனர். அந்தவகையில் தபால் நிலையங்களில் செயல்பட்டு வரும் சிறிய சேமிப்பு திட்டங்கள் இதற்கு சிறந்த தேர்வு . அப்படிப்பட்ட 5 சேமிப்புத் திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்துப் பார்க்கலாம்.

டைம் டெபாசிட் : 

ஒரு ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கான சேமிப்பு திட்டமாகும். இதில் நீங்கள் உங்கள் பணத்தை சேமிக்க துவங்கினால் 5.5% வரை வட்டி பெற முடியும். இந்த திட்டத்தில் நீங்கள் 13 ஆண்டுகள் முதலீடு செய்தால் உங்களின் முதலீடு இரட்டிப்பாக மாறிவிடும் என்பதற்கு தபால் நிலையங்கள் கேரண்டி அளிக்கின்றன. அதே போன்று 5 ஆண்டு திட்டங்களை தேர்வு செய்தால் உங்களுக்கு 6.7% வரை வட்டி கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் 10.75 ஆண்டுகளிலேயே முதலீட்டை இரண்டு மடங்காக திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

சேமிப்பு கணக்கு திட்டம்:

நீங்கள் சேமிப்பு கணக்கு திட்டம் மூலம் சேமிக்க துவங்கினால் உங்களுக்கு கிடைக்கும் வட்டியானது 4.0% ஆக இருக்கும். உங்களின் முதலீடு இரட்டிப்பு அடைய நீங்கள் 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதில் கணக்கு தொடங்க குறைந்தபட்ச தொகை ரூ.500. தனிநபராகவோ அல்லது இருவர் கூட்டாகவோ கணக்கு தொடங்கலாம்.

மாதாந்திர சேமிப்பு திட்டம் : 

தபால் நிலையம் மாதாந்திர சேமிப்பு திட்டம் மூலம் நீங்கள் முதலீடு செய்தால் நீங்கள் ஆண்டுக்கு 6.6% வட்டியை பெற முடியும். மேலும் 10.91 ஆண்டுகளில் உங்களின் முதலீட்டை இரட்டிப்படைய செய்யலாம். மாதா மாதம் வருமானம் தரும் இந்த தபால் அலுவலக சேமிப்புத் திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1,500 மற்றும் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம்.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்:

இத்திட்டத்தில் 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள் தங்களது வாழ்நாள் வரையில் ரூ.15 லட்சம் வரையில் டெபாசிட் செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் வரையில் முதலீடு செய்ய முடியும். தற்போது இந்த திட்டத்தில் 7.4% வட்டியை வழங்குகிறது இந்த திட்டம். உங்களின் பணம் 9 ஆண்டுகளில் இரட்டிப்படையும் வாய்ப்பினை இந்த சேமிப்பு திட்டம் வழங்குகிறது.

தேசிய சேமிப்பு பத்திரம் :

நிதி ரீதியாக நிலையான எதிர்காலத்தைப் பெறுவதற்கான சிறந்த சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகத் தேசிய சேமிப்பு சான்றிதழ் உள்ளது. வருமான வரிச் சட்டம் 80-சி பிரிவின் கீழ் இத்திட்டத்தில் குறைந்தது நான்கு ஆண்டுகளுக்கு நிலையான வருமானம் குறைக்கிறது. இதற்கான வட்டி விகிதம் 6.8 சதவீதம். குறைந்தபட்ச சேமிப்புத் தொகை ரூ.1,000. முதலீடு செய்யும் தொகையை உயர்த்தினால் நீங்கள் எவ்வித முதலீட்டு ஆபத்தும் இல்லாமல் லட்சங்களில் வருமானம் ஈட்டலாம்.

Categories

Tech |