Categories
அரசியல் மாநில செய்திகள்

“”உங்களில் ஒருவனாக இருக்கவே நான் விரும்புகிறேன்”…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து ஒரு வருடம் நிறைவடைய போகிறது. இந்த ஒரு வருடத்தில் பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அதன்பிறகு இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்களுக்காக உணவு, உறக்கம், நேரம் பார்க்காமல் நானும் அமைச்சர்களும் பணியாற்றி வருகிறோம். நானும், அமைச்சர்களும் ஓயாமல் பணியாற்றுவதால் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. ஓயாத பணியால் நாட்டிலேயே முதன் மையான முதலமைச்சராக இருக்க முடிகின்றது. என்ன பொறுப்பில் இருந்தாலும் உங்களில் ஒருவனாக இருக்கவே நான் விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |