சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பாக கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவை காலை முதல் மாலை வரை இயங்கி வருகின்றன. மெகா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் அவை தடுப்பூசி மையங்களாகவும் இயங்கி வருகின்றது. இதன் காரணமாக உடல் நிலையில் சோர்வை உணர்பவர்கள் பரிசோதனை மையங்களுக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் காய்ச்சல், இருமல், சளி ஆகிய அறிகுறிகள் இருப்போர் நேரடியாக வந்து பரிசோதனை மேற்கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதற்காக 1913, 044 25384520, 044 46122300 போன்ற எண்களை தொடர்பு கொண்டு பரிசோதனை மையங்களில் தகவல்களை அறியலாம் என்றும் தெரிவித்துள்ளது.