Categories
உலக செய்திகள்

உங்களுக்கு எதுக்கு கல்வி?…. பிரபல நாட்டில் “பெண்களை விரட்டி அடித்த அரசாங்க அதிகாரி”…. அலறிக் கொண்டு ஓடிய மாணவிகள்….. வைரலாகும் வீடியோ….!!!!

பிரபல நாட்டில் பெண்களுக்கு  எதிரான அடக்குமுறை தொடர்ந்து கொண்டே வருகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தலீபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. இதனால் அவர்கள் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மேலும் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தடை விதித்துள்ளனர். இவர்களின் இந்த தடைகளுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள படாசவும் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு மாணவிகள் பலர் காத்திருந்துள்ளனர். அவர்களை பல்கலைக்கழகத்திற்குள் நுழைய விடாமல் தலீபான்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஒரு அதிகாரி  மாணவிகளை தாக்கி விரட்டியடித்துள்ளார். இதனால் மாணவிகள் அங்கிருந்து ஓடியுள்ளனர்.

இந்நிலையில் பர்தா அணியாததால் பல்கலைக்கழகத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் மாணவிகள் அனைவரும் சரியாக பர்தா அணிந்திருந்தனர். ஆனாலும் அவர்களை வகுப்புக்கு செல்ல விடாமல் தடுத்து விரட்டி அடித்துள்ளனர். மேலும் மாணவிகளை தாக்கிய அதிகாரி தலீபான்  அரசாங்கத்தின் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகத்தின் அதிகாரி என்பது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.  இந்நிலையில் தலீபான்கள் ஆட்சியில் அடிமை வாதம் தலைதூக்கி பெண்களின் உரிமைகள் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான தலீபான்களின் அடக்குமுறை தொடர்ந்து கொண்டே வருகிறது.

Categories

Tech |