நெல்லையில் தேர்தல் பணியாற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 2021 கான சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் நெல்லை போலீஸ் கமிஷனர் அன்பு கூறியதாவது, தமிழகத்தில் இதற்கு முன்னால் நடைபெற்ற தேர்தலில் துணை ராணுவத்தினர் பணியாற்றி தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு பெரும் பங்களிப்பு அளித்தனர். அந்த வகையில் இந்த ஆண்டும் சிறப்பான முறையில் தேர்தல் நடைபெற முன்னாள் துணை ராணுவத்தினர் தேர்தல் பணியாற்ற நெல்லை காவல் துறை சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் தேர்தலில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல் தபாலில் ஓட்டு போடுவதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும். எனவே விருப்பமுள்ள வீரர்கள் மாநகர போலீஸ் அலுவலகத்திலிருக்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகளுக்கு 0462-2970087 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று கூறியுள்ளார்.