Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்களுக்கு கண் பார்வை குறைபாடா.?காரணம், தீர்வு..!!

கண் பார்வை தெளிவடைய மருத்துவம் என்ன.? கிட்டப்பார்வை, தூரப்பார்வை பிரச்சனைகள் குணமாக எளிய வழிமுறைகள் என்ன.? என்பதையும் பார்க்கலாம்..

இன்றைக்கு நிறைய பேருக்கு இருக்கக்கூடிய முக்கிய பிரச்சனை கண் சம்மந்தமான நோய்கள் தான். ஒரு வீட்டில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால் அதில்   இரண்டு பேருக்காவது கண் பார்வை குறைபாடு இருக்கும்.

இன்றைக்கு இருக்கக்கூடிய தலைமுறையினருக்கு அதிக அளவு கிட்ட பார்வை குறைபாடு, தூரப்பார்வை குறைபாடு ஆகும். இந்த இரண்டு குறைபாடுகளில் தான், அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

கண் பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணங்கள்:

வைட்டமின் “ஏ”சத்து குறைவாக இருபர்களுக்கு  கண் பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இந்த சத்து நம்உடலில் இருக்கக்கூடிய நீரை சமநிலையில் வைக்க கூடியது. இச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது கண்களில் நீர்வறட்சி ஏற்படும். இதன் விளைவாகவும் கண் பார்வை குறைபாடு ஏற்படும்.

அதிக ஒளி உள்ள பொருட்களை அதிக நேரம் பார்ப்பது, அதிக அளவில் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் பொழுது அதில் இருக்கக்கூடிய ஒளிகள் கண்கள் பாதிப்படைய செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதிக நேரம் கணினியில் வேலை செய்பவர்களுக்கு கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இப்படி ஒளியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கண்கள் பாதிக்கப்படும். இதனால் கண்ணில் வறட்சி உண்டாகும். இதன் விளைவாகவும் கண் பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

மரபு ரீதியான பிரச்சனை அப்பா, அம்மாவுக்கு கண் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால், குழந்தைகளுக்கும் இந்த மாதிரியான மரபு ரீதியாக கண் சம்பந்தமான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சூரிய ஒளி இல்லாத சூழ்நிலையில் வேலை செய்பவர்களுக்கு கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

கண் பார்வை தெளிவடைய வைட்டமின் “ஏ” அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டு வருவது நல்லது. இந்த சத்து அதிகம் உள்ள உணவுகளை அன்றாட உணவில் நாம் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரும்பொழுது கண் பார்வை சீக்கிரமே தெளிவடையும்.

விட்டமின் ஏ அதிகம் உள்ள உணவுகள்:

 கேரட்:

கேரட் ஜூஸ் குடிக்கலாம், காலை, மாலை என இரு வேளைகளில் கேரட் ஜூஸ் எடுத்துக் கொண்டு வரலாம்.பொறியலாகவும் சமைத்து சாப்பிட்டு வரலாம். பச்சையாகவும் சாப்பிடலாம்.

பொன்னாங்கண்ணி கீரை:

பொன்னாங்கண்ணி கீரையில் அதிக அளவு விட்டமின் ஏ இருக்கிறது. கண் பார்வை குறைபாடு இருப்பவர்கள் வாரத்தில் மூன்று முறை இதை சாப்பிட்டு வந்தால் சீக்கிரமே கண்பார்வை தெளிவடையும். கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் நாம் எடுத்துக் கொண்டு வரும்பொழுது இந்த பொன்னாங்கண்ணிக் கீரை அரை கட்டு கூட வாங்கி வாரத்தில் மூன்று நாள் எடுத்துக் கொண்டு வரலாம்.

கறிவேப்பிலை:

ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி பொன்னாங்கண்ணிக்கீரை இந்த இரண்டையும் மிக்ஸியில் அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் ஜூஸாக எடுத்துக் குடிக்கலாம். இப்படி தொடர்ந்து கேரட் ஜூஸ், கருவேப்பிலை ,ஜூஸ் பொன்னாங்கண்ணி கீரையை உணவில் அதிக அளவு எடுத்து சாப்பிடும் பொழுது சீக்கிரமாகவே கண்பார்வை தெளிவடையும் .

விளக்கெண்ணெய், ஆமணக்கு எண்ணெய்:

இதில் ஒரு சொட்டு எண்ணெய்  மட்டும் எடுத்து  இரவில் தூங்குவதற்கு முன்னாடி கண்ணின் மேல்பகுதி மற்றும் கண்களின் கீழ் என  ஒரு விரல்  வச்சு அப்படியே மசாஜ் செய்து வரலாம். இரவு தூங்கும் முன் இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதனால் கண்ணில் இருக்கக்கூடிய நரம்புகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கண்களில் உள்ள செல்கள் புதுப்பிக்க  இந்த மசாஜை ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும் இந்த ஆயில் மசாஜை தொடர்ந்து இப்படி செய்து விட்டு வருவதனால் கண்பார்வை தெளிவடையும்.

உடற்பயிற்சி:

கண்களை அடிக்கடி திருப்பாமல் ஒரே இடத்தை நோக்கி பார்த்தால் குறைபாடு ஏற்படும். இதனால் நம் கண்களை இடது பக்கம், வலது பக்கம் என அப்படியே உருட்ட வேண்டும். மேல்நோக்கி, கீழ் நோக்கி, இடது, வலது,சைடு என கண்களை உருட்டி பார்ப்பது சிறந்த உடற்பயிற்சி ஆகும் கண்களுக்கு. இப்படி தினமும்  தொடர்ந்து ஓய்வு நேரத்தில் செய்து வாருங்கள்.

தொடர்ந்து ஒரே பொருளை பார்த்துக் கொண்டிருந்தால், கண்களை மூடி, மூடி, கண் சிமிட்டுவது மூலமாகவும் கண்ணுக்கு நல்ல உடற்பயிற்சியாக  இருக்கும். இப்படி செய்யும் பொழுதும் கண்ணிலுள்ள நீர் குறையாமல் இருக்கும். அதேபோல் இப்படி செய்து விட்டு வருவதனால் கண்ணுக்கு நல்லது.

கண் வறட்சி ஏற்படுவது மற்றும் கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம். கணினியில் வேலை செய்பவர்கள், இப்படி செல்போன் அதிக நேரம் பயன்படுத்துபவர்கள் என ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கண்களுக்கு ஓய்வு கொடுப்பது ரொம்பவே நல்லது. அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். இப்படி செய்வது மூலமாக கண்களில் நீர் வறட்சி ஏற்படாமல் நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Categories

Tech |