கனவில் எது வந்தால் நன்மை நடக்கும் என்பது பற்றிய தொகுப்பு
கனவு என்பது அனைவருக்கும் வரும் ஒன்று. கனவு காணாதவர் இல்லை என்று கூட சொல்லலாம். வரும் ஒவ்வொரு கனவுக்கும் நிச்சயமாக ஒரு அர்த்தம் இருக்கும் என கூறுவதுண்டு. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில கனவுகள் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற போவதைக் கூட உணர்த்தும்.
முடி கொட்டுதல்
பொதுவாக முடி கொட்டுகிறது என்றால் மிகவும் கவலை தோன்றும். ஆனால் கனவை பொறுத்தவரை முடி உதிர்வது தோன்றினால் வெகுவிரைவாக உங்களைத் தேடி லட்சுமிதேவி வந்து ஆசீர்வதிக்கப் போகிறார் என்பதற்கான அறிகுறியே ஆகும்.
சூரியன்
உங்களது கனவில் சூரியன் தோன்றினால் வெகு விரைவில் கைநிறைய உங்களுக்குப் பணம் கிடைக்க இருப்பதை குறிக்கும் என்று பவிஷ்ய புராணம் தெரிவிக்கிறது. அதோடு பிரகாசம் நிறைந்த சூரியனின் ஒளி உங்களது வாழ்க்கையை அதிக அளவு பணத்தினால் நிரப்பக் கூடும்.
சந்திரன்
கனவில் சூரியனைப் போன்று சந்திரன் வருவதும் நன்மை கொடுக்கும் ஒன்றாகும். சந்திரனைப் கனவில் பார்த்தாலும் பணக்காரர் ஆவதற்கான அறிகுறிகள் என்று கூறப்படுகிறது. சந்திரன் கனவில் தோன்றினால் உங்களது வாழ்வு அமைதியானதாக இருக்கும்.