Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உங்களுக்கு கார் வேணுமா?…. வாலிபருக்கு நடந்த விபரீத சம்பவம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வாலிபரிடம் பண மோசடி செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பாண்டியன் நகரில் அழகுசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார்.இவர் அதே பகுதியில் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அழகுசுந்தரத்தின் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தன்னிடம் இருக்கும்   2 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை விற்பனை செய்வதாக அழகுசுந்தரத்திடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய  அழகுசுந்தரம் 1 லட்சத்து 99 ஆயிரத்து 210 ரூபாய் பணத்தை அந்த மர்ம நபரின் வங்கி எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து அழகுசுந்தரம் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அழகுசுந்தரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம்  புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணத்தை மோசடி செய்த  மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |