Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு குறைந்த விலையில் எல்பிஜி சிலிண்டரை வாங்கணுமா…? அப்போ உடனே இதை பண்ணுங்க…!!!!!

பணவீக்கம் அதிகரித்து வருவதால் சிலிண்டர்களின் விலையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய சூழலில் இன்று குறைந்த விலையில் எல்பிஜி சிலிண்டரை வாங்குவது எப்படி என்பதை என்பதை இங்கே காண்போம். நவம்பர் ஒன்றாம் தேதி அன்று மக்களுக்கு நிம்மதி தரும் விதமாக வணிக ரீதியிலான எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலையை அரசு குறைத்து இருக்கிறது. இருப்பினும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. அதன்படி சென்னையில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது ரூபாய் 1,893 இதற்கு முன்பாக 2009.50 செலுத்த வேண்டி இருந்தது.

மேலும் ஆறாவது மாதமாக வர்த்தக எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். உங்களது எரிவாயு தீரும் தருணத்தில் இருக்கும் போது ஆன்லைன் தளங்களை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலமாக ஒரிஜினலை விட மலிவான விலைக்கு சிலிண்டரை பெற்றுக் கொள்ள முடிகிறது. இந்த சேவையை பயன்படுத்தி பாரத் கேஸ், எச்பி கேஸ், இண்டேன் கேஸ் போன்றவற்றை மட்டும் தான் தற்போது பதிவு செய்ய முடியும்.

பேடிஎம் ஆப்பில் ஒவ்வொரு முறையும் பதிவு செய்யும்போது 50 முதல் 100 வரை தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம். மேலும் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே ஆபர் வரும் ஒரு சில சமயங்களில் இந்த பேடிஎம் பயன்படுத்தி 100 சதவீத தள்ளுபடி கூட பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் நீங்கள் வாங்க இருக்கும் சிலிண்டர்களை பேடிஎம் மூலம் பயன்படுத்தி பதிவு செய்து தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம் இந்த ஆப் மூலமாக பதிவு கட்டணம் செய்து செலுத்தும் போது மட்டுமே இந்த கேஸ் பேக் சலுகை கிடைக்கிறது.

Categories

Tech |