விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 50 நாட்களைக் கடந்து 14 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் உள்ள போட்டியாளர்கள் பலரும் தெரிந்தவர்கள் தான். கடந்த வாரம் கமல்ஹாசன் போட்டியாளர்கள் நன்றாக விளையாடுவது இல்லை எனக் கூறி கடுமையான கோபத்தில் பேசியிருந்தார். இதனால் இனிவரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டில் மிக விறுவிறுப்பான போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி இந்த வாரம் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் ஒரு குழுவினர் ஏலியனாகவும் மற்றொரு குழுவினர் பழங்குடியினராகவும் விளையாடி வருகிறார்கள். இந்த டாஸ்க் ஆரம்பிக்கும்போதே ஷிவினின் தாய் குறித்து தனலட்சுமி பேசியதால் அவர் அழுது புலம்பினார். இதனைத் தொடர்ந்து அசீம் மற்றும் ஜனனி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது விக்கிரமனுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு விக்ரமனை வெளியேறுமாறு அழுத்தமாக கூறியுள்ளார். அது தொடர்பான புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.