நினைவுகளின் கற்பனை வடிவம் தான் கனவு. மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடாக கூறப்படுகிறது. ஆனால் கனவுகளைப் பற்றி நம் முன்னோர்கள் ஆராய்ந்து பல குறிப்புகளை எழுதி தந்து விட்டுச் சென்றிருக்கின்றனர். அந்த வகையில் கடவுள்களும் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை குறித்து தெரிந்து கொள்வோம்.
கனவில் கோவில்களை கண்டால் அந்த இறைவனின் அருளால் விரைவில் நினைத்த காரியம் நடக்கும் என்று அர்த்தம்.
கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்ட நெரிசலில் மாட்டிக் கொள்வது போல் கனவு வந்தால் ஏதாவது பிரச்சினைகளில் சிக்க போகிறோம் என்று அர்த்தம்.
ஆலயத்தில் நாம் மட்டும் தனியாக இருப்பது போல் கனவு வந்தால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்.
கோவிலின் வாசலை திறந்து உள்ளே செல்வது போல் கனவு வந்தால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைய போகிறோம் என்று அர்த்தம்.
கடவுளுக்கு மாலை அணிவது போல் கனவு வந்தால் நல்ல வளர்ச்சி அடைய போகிறோம் என்று அர்த்தம்.
கோவில் கோபுரம் கனவில் வந்தால் வாழ்க்கையில் உயர போகிறோம் என்று அர்த்தம் வழங்கப்படும்.
பிரசாதத்தை பெற்றுக் கொள்வது போல் கனவு வந்தால் சிலரால் நமக்கு மனக்கவலைகள் ஏற்பட போவது என்று அர்த்தம்.
கடவுளிடம் பேசுவது போல் கனவு காண்பது மிகவும் நல்லது. இது விரைவில் நன்மை பெற போவதன் அறிகுறியாகும்.