Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு சிகிச்சையளிக்க முடியாது!…. இரட்டை குழந்தையுடன் உயிரை விட்ட தாய்…. பெரும் சோகம்….!!!!

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் இரட்டைக் குழந்தைகளும், பிரசவித்த தாயும் பலியாகினர். இந்நிலையில் 3 அரசு மருத்துவமனை செவிலியர்களும், மருத்துவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர், 3 செவிலியர்களையும், மருத்துவரையும் பணியிடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு 3 பேர் அடங்கிய விசாரணைக்குழுவையும் அவர் நியமித்துள்ளார். அரசு ஆஸ்பத்திரியின் ஊழியர்கள், நோயாளிகளிடம் தவறாக நடந்துகொண்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் கொண்டுவருவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை அரசு மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும் நோயாளிகளிடம் தவறாக நடந்துகொண்டால் அவர்கள் நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கப்படுவர். ஆகவே இதுகுறித்து முதல்வரிடம் பேசி இருக்கிறேன், தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுதாகர் கூறியுள்ளார். இறந்த பெண் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி என கூறப்படுகிறது. இவருக்கு பிரசவவலி ஏற்பட்டதும் தும்குர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரிடம் ஆதார் உள்ளிட்ட எந்த ஆவணங்களும், மருத்துவ சான்றிதழ்களும் இல்லை என்பதால், அவருக்கு சிகிச்சையளிக்க முடியாது என அரசு மருத்துவமனை செவிலியர்களும் மருத்துவரும் கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது. பெங்களூரு போக கையில் காசில்லாததால் வீட்டுக்குத் திரும்பிய கர்ப்பிணி இரண்டு குழந்தைகளையும் பிரசவித்தார். இந்த நிலையில் அவரும், பிறந்த குழந்தைகளும் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |