Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

” உங்களுக்கு சியா விதைக்கும், சப்ஜா விதைக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியுமா”…? அப்ப இத படிங்க..!!

சியா மற்றும் சப்ஜா விதைகள் இரண்டும் ஒன்று என்று பலர் நினைத்திருப்பீர்கள். ஆனால் சியா விதைகளுக்கும் சப்ஜா விதைகளுக்கும் இடையே ஏகப்பட்ட வேறுபாடுகள் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளையும் அவற்றின் பயன்களையும் நாம் தெரிந்துக்கொள்வோம்.

சியா விதைகள் சப்ஜா விதைகள் இரண்டுமே கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கும். இதனால் தான் குழப்பம் ஏற்படுகிறது. பழச்சாறுகளை குடிக்கும் போது நிறைய கடைகளில் கருப்பு நிறத்தில் பப்பாளி பழ விதைகள் போன்று போட்டு இருப்பார்கள். அவைகள் தான் இந்த சியா மற்றும் சப்ஜா விதைகள். இந்த இரு விதைகளுமே நம் உடல் எடையை குறைக்க உதவுகின்றன.

சியா விதைகள் என்பது சால்வியா ஹஸ்பனிக்கா என்ற தாவரத்தின் விதைகள் ஆகும். சியா என்பதற்கு வலிமை என்று பொருள். சப்ஜா விதைகள் திருநீற்றுப் பச்சிலை என்கிற தாவரத்தின் விதையாகும். இந்த விதைகளை பலூடாக்களில் பயன்படுத்துவதால் இதை பலூடா விதைகள் என்றும் சிலர் கூறுவர்.

இந்த இரண்டு விதைகளுக்கும் பல வித்தயாசங்கள் உள்ளன. சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும். ஆனால் சியா விதைகளை தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது அப்படியே பொடியாக்கி வேண்டுமானாலும் சாப்பிடலாம். இந்த இரண்டு விதைகளுமே உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தண்ணீரில் பெரிதாகும் தன்மை இருப்பதால் இந்த விதைகளை சாப்பிட்ட உடனே வயிறு நிரம்பி விடும். பசி எடுக்காது. விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சிறப்பான உணவாக இந்த விதைகள் இருக்கிறது. சியா விதையில் புரதங்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

வெந்நீரில் ஊற வைத்து மூன்று வேளை உணவுக்குப் பின்னும் குடித்து வந்தால் மிக வேகமாக உடல் எடையைக் குறைக்க முடியும். சப்ஜா விதை உடல் எடையைக் குறைக்கும். ஆனால் வேகமாகக் குறைக்காது. நிதானமாக முயற்சி செய்ய வேண்டும். உடலுக்கு சப்ஜா விதை குளிர்ச்சியை தருகிறது.

வயிற்றில் ஏற்படும் அசிட்டிட்டி பிரச்சினையையும் களைகிறது. விட்டமின்கள் மற்றும் இரும்புச் சத்துகள் சப்ஜா விதையில் உள்ளது. சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது. சியா விதைகள் மெக்ஸிகோவை பூர்வீகமாக கொண்டது.

சப்ஜா விதைகள் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டுமே புதினா குடும்பத்தை சேர்ந்ததால் பார்ப்பதற்கு ஒன்று போல் தெரிகிறது.

Categories

Tech |