நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர்கள் அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டிற்கும் 12 சிலிண்டர்கள் மட்டுமே கிடைக்கும். அதைத்தாண்டி வாங்க வேண்டுமென்றால் சந்தை விலையில் தான் நீங்கள் வாங்க வேண்டும். இந்த சமையல் சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து மானிய உதவி வழங்கப்படுகின்றது.
இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா காரணமாக சிலிண்டருக்கான மானியம் திடீரென்று நிறுத்தப்பட்டது. பெரும்பாலானோருக்கு மானியம் நிறுத்தப்பட்டதே தெரியவில்லை. மத்திய அரசு நிரந்தரமாகவே மானியத்தை நிறுத்த போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் கடந்த மாதம் மீண்டும் மானிய தொகை வழங்கப்பட்டது. நிறைய பேருக்கு தற்போது மானிய தொகை வந்து கொண்டிருக்கிறது. ஆனால் சிலிண்டர் மானியம் வரவில்லை என்று பலரும் கூறுகின்றனர்.
சில காரணங்களுக்காக சிலிண்டர் மானியம் வராமல் போகலாம். சிலிண்டர் மானியம் பெறுவதற்கு ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணம். ஆதார் கார்டை ஸ்லிடர் கணக்குடன் இணைக்காவிட்டால் மானியம் கிடைக்காது. அதனைப்போலவே குடும்பத்தின் ஆண்டு வருமானம் அரசு நிர்ணயித்த அளவை தாண்டி இருந்தால் மானியம் வராது. ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு மேல் இருந்தால் மானியம் பெறும் தகுதி கிடையாது. எனவே ஆண்டு வருமானம் மற்றும் ஆதார் இணைப்பு போன்றவற்றை உடனே சரி பார்க்க வேண்டும். ஒருவேளை ஆதார் இணைக்கப்படாமல் இருந்தால் உடனடியாக இணைத்துக் கொள்வது நல்லது. சிலிண்டர் மானியம் குறித்துத் தெரிந்துகொள்வதற்கு http://www.mylpg.in என்ற வெப்சைட்டில் சென்று பார்க்கலாம்.
அதனை நீங்கள் வீட்டிலிருந்தே செய்து முடிக்க முடியும். அதன்படி உங்கள் எரிவாயு நிறுவனத்திற்கு ஆன்லைன் மூலமாகவும், IVRS மூலமாகவும் இதனை செய்து முடிக்கலாம். அதில் குறிப்பாக எஸ்எம்எஸ் மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு ஆகியவற்றில் அழைப்பை இணைப்பது மிகவும் எளிது. SMS மூலமாக உங்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, முதலில் உங்கள் மொபைல் எண்ணை இந்தேன் gas ஏஜென்சியில் பதிவு செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மொபைல் எண் பதிவு இல்லாமல் நீங்கள் எரிவாயு இணைப்பு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க முடியாது.
உங்களின் பதிவு செய்யப்படவில்லை என்றால் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பப்பட வேண்டும். அதில் IOC <✓எஸ்டிடி கேட் ஆப் கேஸ் ஏஜென்சியின் தொலைபேசி எண்> <வாடிக்கையாளர் எண்> என்று டைப் செய்ய வேண்டும். இதனை அனுப்பிய உடன் உங்களின் எரிவாயு நிறுவனத்தில் பதிவு செய்யப்படும். அதன்பிறகு நீங்கள் ஆதார் எண் மற்றும் எரிவாயு இணைப்பை இணைக்க SMS அனுப்ப வேண்டும். அதற்காக UID <ஆதார் எண்> என்று டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்ப வேண்டும். அதன் பிறகு உங்கள் எரிவாயு இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். இறுதியாக மொபைல் தொலைபேசியில் உறுதிப்படுத்துதல் செய்தி கிடைக்கும்.
இதனை அடுத்து அழைப்பு மூலமாக ஆதார் எண்ணை இணைக்க, எரிவாயு இணைப்பை எடுத்திருந்தால் ஆதார் உடனான எரிவாயு இணைப்பை ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் இணைக்கலாம். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 1800 2333 555 என்ற எரிவாயு இணைப்புடன் அழைக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் ஆதார் எண்ணைக் கூறி எரிவாயு இணைப்பை உறுதி செய்து கொள்ளலாம்.