வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆயிரம் ரூபாய்க்கு மேல் சிலிண்டர் விலை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மற்றொருபக்கம் சிலிண்டருக்கான மானிய பணம் வரவில்லை என பலர் புகார் தெரிவித்து வருகின்றனர். சிலிண்டர் மானியத்தை அரசு நிறுத்தி விட்டதாகவும் வதந்திகள் பரவி வருகின்றது.
மேலும் சிலிண்டர் மானியம் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் சில நாட்களுக்கு முன்னதாக சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் சிலிண்டர் பயனாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஆனாலும் இந்த மானியம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மட்டுமே எனவும் கூறப்பட்டு வருகின்றது. ஆனால் நிறைய பேருக்கு சிலிண்டர் மானியம் வருவது பற்றியே தெரியவில்லை. சிலிண்டர் மானியம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதற்கான மெசேஜ் வாடிக்கையாளர்களுக்கு அரசு தரப்பில் இருந்து அனுப்பப்பட்டு வருகிறது.
ஆனால் நிறைய பேருக்கு எஸ்எம்எஸ் வருவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அதே போல் சிலிண்டர் மானியம் வருவதை கண்டு பிடிக்க mylpg என்னும் இணையதளம் இருக்கின்றது. ஆனால் இதில் நடைமுறை சிக்கல்கள் இருந்துவருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிலிண்டர் டெலிவரி எடுத்து வரும் டெலிவரி மேனிடம் வாடிக்கையாளர்கள் மானியம் பற்றி தெரிந்து கொள்ளலாம். சிலிண்டர் டெலிவரி சேவைகளுக்கான பிரத்தியோகமாக மொபைல் ஆப் இருக்கின்றது. அதில் சிலிண்டர் சேவை தொடர்பான அனைத்து செய்திகளும் இருக்கின்றன.
டெலிவரி விவரம் பணம் செலுத்துவது போன்ற விபரங்கள் ஒரு சிலிண்டர் மானியம் தொடர்பான விவரங்களையும் அவர்கள் அதில் பார்த்துக் கொள்ள முடியும். மேலும் இந்த ஆப்பின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது மானியம் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. வாடிக்கையாளர்கள் நேரடியாக அந்த ஆப்பில் சென்று காண முடியாது. ஆனால் டெலிவரி மேனிடம் கேட்டு கடந்த ஒரு வருடத்திற்கான மானிய தொகை பற்றிய முழு விவரத்தையும் தெரிந்துகொள்ளலாம்.