Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு சிலிண்டர் மானியம் வராது….. காரணம் இதுதான்….. தெரிஞ்சுக்கோங்க….!!!!

சிலிண்டர் மானியத்தை அரசு நிறுத்தி விட்டதா? உங்களுக்கு மட்டும் பணம் வரவில்லையா? இதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

சிலிண்டர் மானியம் என்பது பயனாளிகள் சிலிண்டர் விலையில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. முதலில் சிலிண்டர் மானியம் போக மீதி தொகையை மட்டும் கொடுத்து சிலிண்டர் வழங்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்த நிலையில் தற்போது முழு தொகையையும் கொடுத்து சிலிண்டர் வாங்கினால், அதன் பின்னர் மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுவிடும். நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு சுகாதாரமான சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகம் செய்தது.

வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் அரசு தரப்பிலிருந்து வழங்கப்படுகின்றது. ஒரு ஆண்டுக்கு 12 சிலிண்டர் வாங்கினாள் மட்டுமே மானிய விலையில் கிடைக்கும். அதை தாண்டி வாங்க வேண்டுமென்றால் சந்தை விலையில் தான் வாங்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக சிலிண்டர் மானியத்தை அரசு நிறுத்தி வைத்திருந்தது. சென்ற ஆண்டிலிருந்து மீண்டும் மானிய பணம் வர தொடங்கியது. நிறைய பேருக்கு இப்போது வரை மானியம் பணம் வரவில்லை. அவர்களுக்கு சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டு விட்டது என்று சந்தேகம் இருக்கலாம்.

ஆனால் வேறு சில காரணங்களுக்காக சிலிண்டர் மானியம் தொகை வராமல் உள்ளதாம். உங்களுடைய ஆதார் கார்டு சிலிண்டர் கணக்குடன் இணைக்காவிட்டாலும் மானியம் கிடைக்காது. அதேபோல குடும்பத்தின் ஆண்டு வருமானம் அரசு நிர்ணயித்த அளவை தாண்டி இருந்தாலும் மானியம் வராது. உங்களுடைய ஆதார் கார்டை, சிலிண்டருடன் இணைக்க நிறைய வழிகள் உள்ளது. நேரடியாக அலுவலகத்திற்கு சென்று இணைக்கலாம். இல்லையெனில் போன் கால் மூலமாக இணைப்பதற்கு 18000-2333-555 என்ற நம்பருக்கு கால் செய்து உங்கள் ஆதார் மற்றும் சிலிண்டர் விவரங்களை வழங்கியும் இணைக்க முடியும்.

சமீபத்தில் நிர்மலா சீதாராமன் சிலிண்டர் மானியமாக 200 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் இந்த மானிய உதவி தொகை உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது மற்ற பயனாளிகளுக்கு சிலிண்டர் மானியம் விரைவில் நிறுத்தப்பட்டு விடும் என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Categories

Tech |