திமுக தரப்பில் இருந்து கூட்டணி கட்சிகள் ஒருபுறம் பேச்சுவார்த்தை என்பது நடைபெற்று வரக் கூடிய நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பது நாளை காணொளி மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒருபுறம் தேர்தலுக்கான நேர்காணல், ஒருபுறம் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, மற்றொருபுறம் 7ஆம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் என பல்வேறு தேர்தல் பணிகளை திமுக முடுக்கி விட்டுள்ளார்கள். இதனிடையே மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற இருப்பதாக தெரிகிறது. அது மட்டுமல்லாமல் மாவட்ட செயலாளர்கள் நிறைய பேருக்கு இந்த முறை சீட்டு இல்லை என்பதையும் நேர்காணலில் சொல்லியுள்ளார்.
கிட்டத்தட்ட நூறு தொகுதிகளுக்கு மேலாக திமுக நேர்காணலை முடித்துள்ளார்கள். மூன்று நாட்களில் நடந்த இந்த நேர்காணலில் நிறைய மாவட்ட செயலாளர்களிடம் உங்களுக்கு சீட் இல்லை. கூட்டணி கட்சிகளுக்கு நிறைய சீட்டு போய்விட்டது. உங்களுக்கு சீட்டு இல்லை என்றாலும் வருத்தப் படாதீர்கள் என்றெல்லாம் பேசப்படவுள்ளது.
வரக்கூடிய ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அது குறித்து ஆலோசனை என்றும், நடைபெறக்கூடிய பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊரில் இருந்து ஆட்களை கூப்பிட்டு வர வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்ட இருக்கின்றது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது நாளை ஒரு மிக முக்கியமான ஆலோசனைக்கு திமுக திட்டமிட்டுள்ளது.