Categories
அரசியல்

உங்களுக்கு சுயதொழில் தொடங்க ஆசையா?…. இதோ சூப்பரான தொழில்…. உடனே தொடங்குங்க….!!!!

இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானோர் சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்று கருதுகின்றனர். அதில் பலர் வெற்றியும் பெறுகின்றன. ஆனால் சிலரால் சுய தொழிலில் நிலைத்து நிற்க முடிவதில்லை. அப்படி நீங்கள் சுய தொழில் தொடங்க திட்டமிட்டு இருந்தால் மிகக் குறைந்த செலவில் தொழில் தொடங்குவது எப்படி என்பது பற்றி இதில் பார்க்கலாம்.

உங்களுக்கு சுய தொழில் தொடங்க எண்ணம் உள்ளது. இந்தத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகத்தான் கிடைக்கும். அது என்னவென்றால் எல்இடி பல்புகள் தயாரிக்கும் தொழில். இதனை நீங்கள் வீட்டில் இருந்தே தொடங்கலாம்.

நாட்டில் பல்வேறு தொழில்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்தத் தொழில் செய்வதற்கும் நீங்கள் மானிய தொகை பெற முடியும். இதற்கு அரசிடமிருந்து நீங்கள் மானியம் பெற்ற பிறகு தொடக்கத்தில் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே முதலீடு செய்தால் மட்டும் போதும். ஒரு எல்இடி பல்பு தயாரிப்பதற்கு 50 ரூபாய் வரை செலவாகும். இது சந்தையில் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தினமும் 100 பல்புகளை விற்பனை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் வரை உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் பல்புகளை தயாரிப்பதற்கான பயிற்சியை வழங்கி வருகிறது. நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் எல்இடி பல்பு தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது அதிக வெளிச்சத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் குறைந்த அளவிலான மின்சாரத்தை பயன்படுத்த உதவுகிறது. எனவே இதனை மக்கள் அதிகமாக வாங்கி பயன்படுத்துகின்றனர்.

Categories

Tech |