செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்து இருந்தீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்காகத்தான்.
தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான விதிமுறைகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் .மத்திய அரசு சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது தமிழகத்தில் செல்வமகள் திட்டம் என்ற பெயரில் செயல்படுகிறது. பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் சேமித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தில் சில விதிமுறைகளை அரசாங்கம் மாற்றம் செய்துள்ளது. ஒருவேளை நீங்களும் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்திருந்தால் அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மத்திய அரசின் இந்த திட்டத்தில் 80 சி யின் கீழ் வரி விலக்கு பலன் இரண்டு மகள்களின் கணக்கில் மட்டுமே கிடைத்தது. அதனால் 3வது மகளுக்கு எந்த பயனும் கிடையாது. ஆனால் தற்போது ஒரு மகளுக்கு பின் 2 மகள்கள் அதாவது இரட்டை குழந்தைகள் பிறந்து இருந்தால் அவர்களுக்கு கணக்கு திறக்கும் போது சில விதிமுறைகள் உள்ளது. அதாவது ஒரே நேரத்தில் மூன்று மகள்களின் பெயரில் பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 250 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். புதிய விதிகளின் படி, முடங்கப்பட்ட கணக்கு மீண்டும் செயல்படுத்தபடாவிட்டால் முதிர்வு காலம் வரை கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டி கிடைக்கும். இதற்கு முன்பு அப்படி இல்லை. இந்த விதிமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது.
மேலும் புதிய விதி மாற்றத்திற்குப் பிறகு கணக்குக்கு தவறாக அனுப்பப்படும் வட்டி தொகையை மாற்றும் வசதி நீக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் கணக்கின் வருடாந்திர வட்டி வரவு வைக்கப்படும். முந்திய விதிகளின்படி மகளுக்கு பத்து வயது ஆனபிறகு அவர்கள் கணக்கை கையாள முடியும். ஆனால் இப்போது அவளுக்கு 18 வயது ஆனபிறகு கணக்கை கையாள முடியும் . அதாவது அதற்கு முன்பாக பெற்றோர்கள் மட்டுமே இயக்க முடியும் என தெரிவித்துள்ளது.