சென்னையில் உள்ள இந்திய ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பாக ஜப்பானிய மொழி பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஜப்பான் நிலையையே கல்வி மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்திய -ஜப்பான் தொழில் வர்த்தக சபை கடந்த 30 வருடங்களாக செயல்பட்டு வருகின்றது. இதன் கீழ் செயல்படும் மொழிப்பள்ளி சார்பாக ஜப்பானிய மொழி பேச்சு மற்றும் எழுத்து பயிற்சிக்கான அடிப்படை வகுப்பு நடைபெறுகிறது.
இதற்கு விருப்பமுள்ளவர்கள் நேரடியாக மற்றும் ஆன்லைன் மூலமாக கலந்து கொள்ளலாம். இந்த வகுப்பு இன்று டிசம்பர் 17ஆம் தேதி முதல் 6 மாதங்கள் நடைபெறும் எனவும் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10,900 பயிற்சி கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-4855 6140, 98843 94717 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.