Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு தங்க நகை லோன் வேண்டுமா?….. களத்தில் இறங்கும் ஏர்டெல் பேங்க் பேமென்ட்…..!!!!

தங்க நகைகளுக்கான லோன் கொடுக்கும் திட்டத்தை முத்தூட் பைனான்ஸ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் தங்கத்தில் முதலீடு செய்வதை பலரும் பாதுகாப்பாக நினைக்கின்றனர். இந்த தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியில் தனியார், அரசு வங்கிகள்,  தனியார் நிறுவனங்களும் மக்களுக்கு லோன் கொடுத்து வருகின்றன. ஏர்டெல் பேமென்ட் வங்கியின் மூலமாக தற்போது முத்தூட் பைனான்ஸ் தங்க நகைகளுக்கு லோன் கொடுக்க திட்டமிட்டு உள்ளது. இந்த தங்க நகை கடனுக்கு செயலாக்க கட்டணம் எதுவும் கிடையாது. அடகு வைக்கப்பட்ட தங்க மதிப்பில் இருந்து 75 சதவீதம் வரைக்கும் கடனாக வழங்கப்படும் என ஏர்டெல் பேமென்ட் வங்கி தெரிவித்துள்ளது.

தங்க நகைகள் மட்டுமல்லாமல் தனிநபர் முதல் தொழில்முறை வரையிலான அனைவருக்குமே சிறந்த திட்டத்தை ஏர்டெல் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. பாதுகாப்பு மற்றும் மலிவு விலையில் லோன் கொடுப்பதில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் மகிழ்ச்சி அடைவதாக நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாயில் இருந்து முத்தூட் பைனான்ஸ் வங்கியின் மூலமாக நகை கடன் பெற்றுக் கொள்ளமுடியும். அதிகபட்சமாக தங்கத்தின் மதிப்பு எவ்வளவு என்பதை பார்த்து அதில் 75% வரைக்கும் நகை கடனை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |