தங்க நாணயங்கள் எனக்கூறி 30 லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தோல் பை தயாரித்து ஏற்றுமதி செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரை சந்தித்து பேசிய மர்ம நபர் ஒருவர் தன்னிடம் 4 கிலோ தங்க நாணயங்கள் இருப்பதாகவும், அதற்கு 30 லட்ச ரூபாய் பணம் தருமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய சுரேஷ் அந்த மர்ம நபரிடம் 30 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து 2 1/2 கிலோ தங்க நாணயங்களை வாங்கி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனையடுத்து அந்த தங்க நாணயங்களை பரிசோதனை செய்ததில் அது பித்தளை காசுகள் என்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.