நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்களுக்கு ரேஷன் திட்டம் பெரிதும் உதவியாக உள்ளது. இலவசமாகவும் மலிவு விலையிலும் அரசு அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது அரசு நிதி உதவியும் கிடைக்கிறது. இதையெல்லாம் பெறுவதற்கு ரேஷன் கார்டு மிகவும் அவசியம். இந்நிலையில் நீங்கள் திருமணமானவராக இருந்து உங்களிடம் ரேஷன் கார்டும் இருந்தாள் இது உங்களுக்கு மிக முக்கியமானது. அந்த ரேஷன் கார்டில் உங்களுடைய முழுமையான தகவல்கள் அனைத்தும் இருக்க வேண்டும்.
உங்களின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.அதிலும் குறிப்பாக உங்களுக்கு திருமணமாகி இருந்தால் உங்களுடைய மனைவி பெயர் ரேஷன் கார்டில் கட்டாயம் இருக்க வேண்டும். உங்களின் குடும்பத்தில் புதிய உறுப்பினர் இருந்தால் அந்த உறுப்பினரின் பெயரை ரேஷன் கார்டில் சேர்ப்பது அவசியம். இதனை செய்யாவிட்டால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ரேஷன் பொருட்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.
எனவே நீங்கள் திருமணமானவராக இருந்தால் முதலில் ஆதார் அட்டையில் அதனை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு பெண் உறுப்பினரின் ஆதார் அட்டையில் கணவர் பெயரை சேர்க்க வேண்டும். அதேசமயம் உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறந்தால் அவரது பெயரை சேர்க்க தந்தையின் பெயர் மிகவும் அவசியம். பிறகு முகவரியை மாற்ற வேண்டும்.ஆதார் அட்டை அப்டேட் செய்த பின்னர் திருத்தப்பட்ட ஆதார் அட்டை நகலுடன் ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க உணவுத்துறை அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு அலுவலகத்திற்கு சென்ற விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
இதனை தவிர வீட்டிலிருந்தே நீங்கள் புதிய உறுப்பினர்களின் பெயர்களை சேர்க்க விரும்பினால் இதற்கு முதலில் உங்கள் மாநில உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் ஆன்லைனில் உறுப்பினர்களின் பெயர்களை சேர்க்கும் வசதி இருந்தால் வீட்டிலிருந்தபடியே இந்த வேலையை முடிக்கலாம். உங்கள் குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க விரும்பினால் அவருடைய ஆதார் அட்டையை முதலில் பெறவேண்டும். அதற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அவசியம். அதன்பிறகு ஆதார் அட்டையுடன் ரேஷன் கார்டில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய நீங்கள் விண்ணப்பிக்கலாம்.