Categories
ஆன்மிகம் உலக செய்திகள் ஜோதிடம்

உங்களுக்கு “திருவாதிரை நட்சத்திரமா ” வெடித்துச் சிதறப் போகிறதாம்..! பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்

உங்களுக்கு “திருவாதிரை நட்சத்திரம்”  கொஞ்சம் மனசு கஷ்டமாதான் இருக்கும் ,ஆனால் உண்மைங்க..! பீதியை கிளப்பும் விஞ்ஞானிகளின் தகவல்.                    

திருவாதிரை நட்சத்திரம் சீக்கிரம் வெடித்து சிதற போகிறதாம் ஏற்கனவே அதன் ஒளி வேகமாக குறைய தொடங்கியுள்ளது. எந்த  நட்சத்திரமாக இருந்தாலும் எல்லாம் சில காலம் தான்.

ஆங்கிலத்தில் Betelgeuse   என்றழைக்கப்படும் விண்வெளியில் ஒரு முக்கிய நட்சத்திரம் நம்மவர்களால் திருவாதிரை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜோதிடத்தில் கால  நேரம் குறிக்க பயன்படும் நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று விண்வெளியில் ஓரியான்(Orion) அதாவது மிருகசிரிஷம் என்ற நட்சத்திர குடும்பத்தில் இடம்பெற்றுள்ள ஒரு விண்மீன் தான் திருவாதிரை ஆகும்.

இந்த  விண்மீன் அளவு அடிப்படையில் பார்த்தால் சூரியனை   விட 20 மடங்கு பெரியது. இந்த நட்சத்திரம் சுருங்கி விரியும் தன்மை கொண்டது.  நட்சத்திரங்கள் பொதுவாக இறுதிக்கட்டத்தில் ஊதி பெரிதாக்கி வெடித்துச் சிதறும் இதற்கு அறிவியலாளர்கள் சூப்பர்நோவா என்ற பெயர் சூட்டியுள்ளனர்.

ஒரு விண்மீன் தனது இறுதிக் காலத்தை நெருங்கும் போது அதன் பிரகாசம் குறையத் தொடங்கும் திருவாதிரை நட்சத்திரம் 1 லட்சம் ஆண்டு பழமையானது எனவே  சூப்பர்நோவா இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது.

அதற்கு ஏற்ப நட்சத்திரத்தின் உள்ளே உள்ள தனிமங்கள் எரிவது அதி வேகமாக நடந்து கொண்டிருந்ததை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.

கடந்த ஓராண்டில் மட்டும் பெருமளவில் திருவாதிரை நட்சத்திரம் மங்கிப்போய் உள்ளது 2019 ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதை உறுதி செய்கிறது. சுமார் 36 சதவீதம் அளவுக்கு ஒரு ஆண்டுக்குள் மங்க  துவங்கியுள்ளது இதுவே சூப்பர் நோவா எனப்படும்.

வெடித்து சிதறும் நிலையை திருவாதிரை நெருங்கி  வருவதன் அடையாளம் என கூறுகின்றனர். விஞ்ஞானிகள் 600 ஒளியாண்டு தொலைவில் திருவாதிரை நட்சத்திரம் உள்ளதால் அது வெடித்து சிதறும் போது பூமிக்கு  எந்த பாதிப்பும் ஏற்படாது.  அதேசமயம் நட்சத்திரம் குறித்த புரிதலை இந்த வெடிப்பு மேலும் அதிகரிக்க செய்யும் என்கிறார்கள் விஞ்ஞானிகள் எனவே திருவாதிரையை பின்னணியில் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இதற்கு முன்பு நட்சத்திர வெடிப்புகள் நடந்த போது அவற்றை ஆய்வு செய்வதற்கு தேவையான உபகரணங்கள் இருந்ததில்லை இன்றைய காலகட்டத்தில் நிறைய உபகரணங்கள் இருப்பதால் இந்த நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் பின் தொடர்கின்றனர்.

Categories

Tech |