கிராமப்புறங்களில் சிறு வயதில் கொடுக்காப்புளி மரங்களில் காய்த்துக் கிடக்கும் காய்களைக் கல்லை கொண்டு எரிந்து பறித்து சுவைத்து உண்டு வந்த நாட்கள் போய் தற்போது அந்த கொடுக்காப்புளி கடைகளில் வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். சாதாரணமாகவே கிடைக்கும் கொடுக்காய்ப்புளி தற்போது 200 ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகிறது. பெரிய மரங்களில் கொத்து கொத்தாக காய்த்து கிடக்கும். இவற்றில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.
மருத்துவ பயன்கள்:
கொடுக்காப்புளி சாப்பிடுவதால் சர்க்கரை நோய் விரட்டி அடிக்கப் படுகிறது.
மூட்டு வலி மற்றும் வாத நோயால் அவதிப்படுபவர்களுக்கு இது சிறந்த மருந்தாக இருக்கிறது.
உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்றுப்போக்கை சரி செய்கிறது.
செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.
பெண்களுக்கு கர்ப்பப்பை நோய்களுக்கும், குடல் நோய்களுக்கும் இது சிறந்த தீர்வாக இருக்கிறது.
உடல் எடையை குறைப்பதற்காக இது சிறந்தது.
இதனுடைய விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் சோப்புகள் தயாரிக்கப்படுகின்றன. சோப்புகள் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.