நம்முடைய நாட்டில் ரயில் பயணம் செய்யாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். ஏதாவது ஒரு ரயிலில் நீங்கள் உள்ளூர், வெளியூர் அல்லது வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்திருப்பீர்கள். இப்படி நீங்கள் பயணம் செய்யும் ரயில்கள் ரயில்வே ஸ்டேஷனில் வருவதற்கு முன்னால் ரயிலின் எண்ணையும் பெயரையும் சொல்வார்கள். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு தெரியும் ரயிலின் எண்ணோடு பெயரும் இருக்கும். ஒவ்வொரு இடங்கள் செல்லும் ரயிலுக்கு ஒவ்வொரு 5 இலக்க எண்கள் இருக்கும்.
இந்த 5 இலக்க எங்களுக்கும் தனி அர்த்தங்கள் உள்ளன. அவை என்ன என்பதை பற்றி பார்ப்போம். 5 இலக்க எண்ணில் முதல் இலக்கம் 0 வாக இருந்தால் அது சிறப்பு ரயில்கள். அதாவது விடுமுறை காலங்கள், பண்டிகை காலங்கள் மற்றும் கோடைகாலங்களில் மட்டும் ஸ்பெஷலாக விடப்படும் ரயில்களுக்கு முதல் எண் 0 வாக இருக்கும். இதை தவிர்த்து ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் இருக்கும் ஐந்து இலக்க எண்களில் முதல் இரண்டு எண்கள் ரயில் பெட்டியின் உற்பத்தி ஆண்டையும், அடுத்த மூன்று எண்கள் அந்த ஆண்டில் உருவாக்கப்பட்ட பெட்டிகளின் எண்ணிக்கையும் குறிக்கின்றது.