Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வரலையா?….. இன்றே கடைசி நாள்…. உடனே இத பண்ணுங்க…..!!!!!

தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளில் குறிப்பிட்ட அளவு நகைகளை அடகுவைத்து கடன் பெற்றவர்களுக்கு அவர்களது கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்ததும் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நகைக்கடன் விபரங்களை ஆய்வு மேற்கொண்டபோது தமிழகத்தின் பல மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் குளறுபடிகள், முறைகேடுகள் நடந்து இருப்பதாக தெரியவந்தது. ஆகவே இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் விபரங்களை சேகரிக்க சிறப்பு தணிக்கை நடந்தது. இதனை அடிப்படையாக கொண்டு நகைக் கடன் தள்ளுபடி பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த அடிப்படையில் சுமார் 13லட்சம் நபர்கள் மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி பெற தகுதியுடையவர்கள் எனவும் 35 லட்சம் பேர் தகுதி இல்லாதோர் எனவும் தெரியவந்தது. இவை பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதிபெறாதவர்கள் தங்களின் ஆட்சேபனை மற்றும் மேல் முறையீட்டு மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இது பற்றி தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சி.தமிழ்நங்கை கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்தில் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்பட்டியல் அடிப்படையில் நகைக் கடன் தள்ளுபடி கிடைக்காதவர்கள் தங்களது மேல் முறையீட்டு மனுக்களை பட்டியல் வெளியிடப்பட்டதில் இருந்து ஒருமாத காலத்திற்குள் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே  கடன் தள்ளுபடி பெற நிபந்தனைகளின் படி, தகுதி இருந்தும் பட்டியலில் இடம்பெறாதவா்கள் தகுந்த ஆதாரத்துடன் தங்களது மேல்முறையீட்டு மனுக்களை எழுத்துப்பூா்வமாக தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை சரகத் துணைப் பதிவாளா்களிடம் மே 22 ஆம் தேதிக்குள் அளிக்கலாம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |