இங்கிலாந்து நாட்டின் இளவரசர் வில்லியமும், இளவரசி கதேயும் கரீபியன் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று அவர்கள் பெலீஸ் நாட்டுக்கு சென்றனர். இதையடுத்து தலைநகர் பெல்மோபனிலுள்ள இங்கிலாந்தின் ராணுவ பயிற்சி மையத்திற்கு சென்ற இளவரசர் அங்கிருந்த ராணுவ வீரர்களுடன் பேசினார். இந்நிலையில் அவர் ரஷ்யாவின் ஆக்ரோஷமான போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு மரியாதை செலுத்தினார்.
மேலும் அங்கு பேசிய அவர் உக்ரைனை பாதுகாக்க போராடி வரும் ராணுவ வீரர்கள் மற்றும் அந்நாட்டு மக்களுடன் தான் ஒன்றாக துணை நிற்பதாக தெரிவித்தார். அத்துடன் ஜனநாயகத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை கண்டிக்கும் நாடுகளுடன் பெலீஸ் இணைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.