இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் இன்றளவும் பல மூட நம்பிக்கைகளை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். அதாவது மாந்திரீகம், சூனியம்,ஜோதிடம் உள்ளிட்டவற்றை மக்கள் நம்பி பலவித செயல்களிலும் ஈடுபட்டு வருவது வழக்கம் தான். அவ்வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் வினோதமான ஒரு மூடநம்பிக்கை பரவி வருகின்றது.ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்ற ஜோதிடர் தெரிவித்தால் வாரத்திற்கு ஒரு தடவை 500 ரூபாய் கொடுத்து ஜெயிலுக்குள் இருந்து விட்டு வரும் புதிய பரிகாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி செல்பவர்களுக்கு ஜெயில் உடை வழங்கப்பட்டு சாப்பாடும் போடப்படுகிறது.ஜெயிலுக்குள் ஒரு நாள் தங்கி விட்டு வந்தால் சிறை தண்டனை அனுபவிக்கும் தோஷம் போய்விடும் என்று அங்குள்ளவர்கள் நம்புகின்றனர்.