விவசாயியிடம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருகே கன்னலம் கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 2021-ஆம் வருடம் கபிரியேல் ஐசக் என்பவர் இணையதளம் மூலமாக மோகனிடம் நண்பர் ஆகியுள்ளார். இவர் மோகனுக்கு பல பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் கபிரியேல் ஐசக் தொலைபேசி மூலமாக மோகனை தொடர்பு கொண்டு உங்களுக்கு பார்சல் வந்திருப்பதாக கூறியுள்ளார்.
இதற்காக 1,68,000 ரூபாய் பணம் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பிய மோகன் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளார். அதன்பிறகு கபிரியேல் ஐசக்கிடம் எந்த ஒரு தகவலும் வரவில்லை. இதுகுறித்து மோகன் விழுப்புரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.