Categories
பல்சுவை

உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா?…. இனி கவலைய விடுங்க…. இதோ சூப்பரான திட்டம்….!!!!

நம் நாட்டில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு ஆரம்பிக்கலாம். மேலும் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரோ தபால் நிலையம் அல்லது வங்கிக்குச் சென்று கணக்கு தொடங்கலாம். செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வருடத்திற்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது.

மேலும் சிறு சேமிப்பு திட்டங்களிலேயே செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தான் அதிக வட்டி கிடைக்கிறது. 21 வயதில் கணக்கை முடிக்கும் போது, 3 மடங்கு தொகை கிடைப்பதால் பொதுமக்களிடையே இந்த திட்டம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அந்தப் பெண்ணிற்கு 24 வயது ஆகும் போதோ அல்லது அந்தப் பெண்ணின் திருமணத்தின் போதோ கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எடுத்து விட்டு கணக்கை முடித்துக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைகளை சேர்ப்பதற்கு, பிறப்புச் சான்றிதழ் கொடுக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றால் ஆதார் கார்டு தேவைப்படும். பெற்றோரின் ஆதார் கார்டு மிகவும் அவசியம். இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகலாம். செல்வமகள் திட்டத்தின் படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களுடன் புகைப்படத்தை சேர்த்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

அவர் சமர்ப்பித்தால் உடனடியாக சேமிப்பு கணக்கு திறக்கப்படும். தொடர்ந்து செல்வமகள் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்கும்போது, முதல்கட்டமாக 250 ரூபாய் செலுத்தினால் போதும். ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 1,000 ரூபாயும் அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை செலுத்தலாம். கணக்கு தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் டெபாசிட் செய்ய முடியும். தொடர்ச்சியாக டெபாசிட் செய்யாமல் இடைவெளி விட்டால் கணக்கு மூடப்பட்டு விடும். இதை எடுத்து டெபாசிட் தொகையுடன் வருடத்திற்கு 50 ரூபாய் அபராதம் செலுத்தினால் தான் கணக்கை புதுப்பிக்க இயலும்.

Categories

Tech |