Categories
அரசியல்

உங்களுக்கு மன அழுத்தம் இருக்குதா?….. மன அழுத்தத்தில் இருந்து மீண்ட பிரபலங்கள் கூறும் வார்த்தைகள்….!!!!

மனநல பிரச்சினை என்பது ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய நோயாக உள்ளது. இதன் காரணமாக பலர் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். அதிலும் சமீபத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் என்று மனதளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்கள் சற்றும் யோசிக்காமல் தற்கொலை என்று முடிவை எடுத்து விடுகின்றனர். ஆனால் தற்கொலை ஒரு பிரச்சனைக்கு எப்போதும் தீர்வாக முடியாது. அதனை எதிர்த்து நாம் போராட வேண்டும். அப்படி போராடி பல நபர்கள் தங்கள் வாழ்க்கையில் வென்றுள்ளனர். பல பிரபலங்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த மன அழுத்த பிரச்சனைகளைப் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளனர் .அதில் சிலரை இதில் பார்ப்போம் .

சாமா சிக்கந்தர் : ஏ மேரி லைப் ஹே என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர். இவர் சமீபத்தில் பி போலார் டிஸ் ஆர்டர் என்ற மூலை சார்ந்த நோய் காரணமாக பாதிக்கப்பட்ட இவர் அதிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு மீண்டும் வந்துள்ளார். அதைப் பற்றி அவர் தெரிவிக்கும்போது ஒரு வருடம் எனக்கு என்ன நடந்தது என்று கூற கூட தெரியாது. மிகவும் இருட்டாக, சோகமாக இருந்தது. அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை நான் திசையற்றவனாக உணர்ந்தேன். ஒருவரின் நம்பிக்கையே இந்த உலகில் அனைவரையும் வாழ வைக்கின்றது. நம்பிக்கை இல்லை என்றால் உலகில் எதுவுமே கிடையாது.

தீபிகா படுகோன் : சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தீபிகா படுகோனே மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பது தொடர்பாக ஆலோசனை வழங்கினார். அதில் பல நாட்கள் நான் காலையில் எழுந்திருக்க மாட்டேன். தூங்கிக்கொண்டே இருப்பேன். தூங்குவதின் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்று நினைத்தேன். என்னுடைய பெற்றோர் பெங்களூரில் வசித்தனர். ஒவ்வொரு முறை என்னைக் காண வரும் போதும் நான் நன்றாக இருப்பதாக அவரிடம் கூறுவேன். அப்படி ஒரு நாள் அவர்கள் என்னை சந்தித்து விட்டு பெங்களூரு புறப்படும்போது நான் உடைந்து விட்டேன்.

என்னுடைய அம்மா என்னிடம் உனக்கு ஆண் நண்பர்கள் மூலம் ஏதாவது பிரச்சனையா?  இல்லை வேலையில் பிரச்சனையா? என்று கேட்டார் அந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை . ஆனால் எனக்கு பிரச்சனை இருந்தது. என்னை சுற்றி யாருமே இல்லாதது போல் இருந்தது. என்னுடைய தாய் என் பிரச்சினையை புரிந்து கொண்டார். அப்போது கடவுள் தான் எனக்கு அவர் மூலம் என் பிரச்சனைக்கு தீர்வு காண வைத்தார் என்று எண்ணினேன்.  சில நேரங்களில் எனக்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அவற்றையெல்லாம் கடந்து வந்து விட்டேன். இந்த இடத்தில் என்னுடைய தாய்க்கு நான் நன்றி சொல்ல கடமை பட்டு உள்ளேன்.  தினமும் காலையில் எழுந்த போது எந்த சிந்தனையும் இல்லாமல் தியானம் செய்ய வேண்டும். மேலும் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது ஒரு மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது மிக சிறந்தது என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |