மூல நோய் பிரச்சினை உள்ளவர்கள் இந்த துத்தி இலையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.
இந்த வெயில் காலத்தில் நம்மில் சிலர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று மூலநோய். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, மிஷின் தொழில் சம்மந்தமான இடங்களில் வேலை பார்ப்பவர்கள் அதிக வெப்பம் காரணமாக மூல நோய் பிரச்சனைகள் அவதிப்படுகின்றனர். அதற்கு முதலில் நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதைத்தவிர இயற்கை முறையில் எப்படி இதனை சரி செய்வது என்பதையும் தெரிந்து கொள்வார்கள்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் காரமும் புளிப்பும் அதிகம் சேர்ப்பதால் குடல் புண்ணாகி அலர்ஜி ஏற்பட்டு மூலநோய் ஏற்படுகிறது. இதனால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை தண்ணீரில் நன்கு அலசி எடுத்து அதனை சிறிது சிறிதாக நறுக்கி அத்துடன் பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும். வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் சரியாகும்.