ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் குறைபாடு காரணமாக இரத்தசோகை ஏற்படுகிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படுகின்றது.
இதனை தடுக்க நாம் நமது உணவுப்பழக்கத்தை சிறிது மாற்றவேண்டும். பெரும்பாலும் ரத்த சோகை காணப்படுபவர்கள் சோர்வுடனும், களைப்பாகவுமே இருப்பார்கள்.
இதற்கு நம் இரத்ததில் உள்ள இரும்புச் சத்தை அதிகப்படுத்துவதே சிறந்த வழி. தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ், கேரட் ஜூஸ் எடுத்துக்கொள்ளவேண்டும்.
இரத்த சோகை இருப்பவர்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. ஏனெனில் வைட்டமின் சி சத்து தான் உடலில் இரும்புச்சத்து உறிஞ்ச உதவும். தேனில் இரும்புச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், இவற்றை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தி வர, உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.
அதேபோல் தினமும் முருங்கைக்கீரை சாப்பிட்டு வர இரத்தத்தில் இரும்புச் சத்து அளவு நன்கு அதிகரிக்கும். மேலும் தினமும் பேரிச்சம் பழம், பாதம், உலர்ந்த திராட்சைப் பழங்களையும் சாப்பிடவேண்டும்.
இதனை தினமும் உங்களது உணவோடு சேர்த்துக்கொள்ளும் போது இரத்த சோகை வருவதைத் தடுக்க முடியும்.