மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது. இதுவரை ஏழு தவணைகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து எட்டாவது தவணையை மே 14 ஆம் தேதி காலை 11 மணிக்கு ரூ.2000 வீதம் ரூ.19,000 கோடியை பிரதமர் மோடி பயனாளர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தினார்.
இத்திட்டத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியுதவி வரவில்லையென்றால் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கீழ்கண்ட டோல் பிரீ எண்கள் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.
பிஎம் கிசான் டோல் ஃப்ரீ நம்பர்: 18001155266,
பிஎம் கிசான் ஹெல்ப் லைன் நம்பர்: 155261,
பிஎம் கிசான் லேண்ட் லைன் நம்பர்: 011-23381092, 23382401,
பிஎம் கிசான் புதிய உதவி எண்: 011-24300606,
பிஎம் கிசான் ஹெல்ப் லைன்: 0120-6025109,