2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் கடந்த ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை தாமத கட்டணத்துடன் வருமான வரி தாக்கல் செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே கடைசி தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யாத பலரும் ஏற்கனவே வருமான வரி ரீசன் தொகையை வாங்கி விட்டார்கள். ஒரு சிலர் வருமான வரி ரீபண்ட் தொகை கிடைப்பதற்காக காத்திருக்கின்றனர்.
இருந்தாலும் சிறு தவறுகள் செய்தால் கூட அந்த தொகை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். எனவே நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகளை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். முதலில் வருமான வரி தாக்கல் செய்தாலும் வருமான வரி ரிட்டன் வெரிஃபை செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த ரிட்டன் செல்லாததாக கருதப்படும். செல்லாத ரிட்டன்கள் பிராசசிங் செய்யப்படாது.
வருமான வரி ரிட்டன் பிராசசிங் செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வருமான வரி ரிப்பன் தொகை உங்களுக்கு கிடைக்கும். எனவே உங்களுக்கு வருமான வரி ரீபண்ட் தொகை கிடைக்க வேண்டுமென்றால் உடனடியாக வருமான வரி ரிட்டன் வெரிஃபை செய்ய வேண்டும். ஆதார் ஒடிபி மூலமாகவும் வங்கி கணக்கு மின்னணு சரிபார்ப்பு போடும் மூலமாகவும் எளிதில் வருமான வரி ரிட்டன் வெரிஃபை செய்து முடிக்கலாம்.