# பயிறு வகைகளை சாகுபடி செய்த பின் பயிறு இல்லாத வேறு எதாவது பயிர்களைப் பயிர் செய்ய வேண்டும். உதாரணமாக பச்சைப் பயிறு, கோதுமை, மக்காச் சோளம்.
# முதலாவதாக செய்த பயிர் வகை (அல்லது) தானியங்கள் ஆகிய வேறொன்றுடன் ஊடுபயிராக பயிர் செய்து இருந்தால் மீண்டும் வேறு வகைப் பயிருடன் சேர்த்துப் பயிறு வகைகளைப் சாகுபடி செய்யலாம்.
# சிலவகை பயிர்கள் மண்ணில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகிறது. உதாரணமாக எள், கடலை. ஆகவே இந்த பயிர்களை பயிர் செய்த பிறகு பயிறு வகைகளைப் சாகுபடி செய்தால் அவை சத்துக்களை மண்ணில் நிலை நிறுத்தும்.
# அவ்வப்போது இலைகள் மண்ணில் உதிரும் வண்ணமுள்ள செடிகளையும் பின்பற்றலாம். உதாரணமாக பயிறு, பருத்தி, கோதுமை, நெல்
# தானியப் பயிர்களுக்குப் பின் பசுந்தாள் உரத்தாவரங்களைப் பயிரிடலாம். உதாரணமாக சனப்பை, நெல், துவரம் பருப்பு, பச்சைப்பயிறு, கோதுமை, மக்காச்சோளம்.
# நல்ல அதிக ஊட்டச்சத்து தேவை மிக்க பயிறுக்குப் பிறகு, குறைந்த ஊட்டச்சத்து தேவைமிக்க பயிர்களைப் பயிரிடுதல் வேண்டும். உதாரணமாக மக்காச்சோளம், உளுந்து, பூசணி வகைகள்.
# வேளாண் காய்கறிகளை பயிர்களுக்குப் பிறகு தீவனப்பயிர்களைப் பயிர் செய்யலாம். உதாரணமாக சோளம்+தட்டைப்பயிறு _ கோதுமை/உருளைக் கிழங்கு/முட்டைக்கோஸ்/ வெங்காயம்.
# சில விதைத்தாவரங்களைத் தொடர்ந்து தண்டு (அல்லது) வேர்த் தாவரங்களை ஊன்றலாம்.
# மறு தாம்புப் பயிர்களுக்குப் பிறகு ஆழமாக செல்லக்கூடிய வேர் பயிர்களைப் சாகுபடி செய்யலாம்.
# தூய்மைப்படுத்தும் பயிர்களைத் தொடர்ந்து நாற்றங்கால் பயிர்களை நடலாம். உதாரணமாக உருளைக்கிழங்கு, கொலகேசியா, மஞ்சள், பீட்ரூட், கேரட்,
# ஆழம் அதிகமான வேர்களைத் தொடர்ந்து, மேலோட்டமான வேர் உள்ள பயிர்களை விதைக்கலாம். உதாரணமாக பருத்தி, ஆமணக்கு, துவரம் பருப்பு, உருளைக்கிழங்கு, லெண்டில், பச்சைப்பயிறு.
# மிகவும் ஆழமான உழவு தேவைப்படும் பயிர்களை கோடை உழவு முடிந்தவுடன் பயிரிட்டுவிட்டு பின் சற்று இறுகிய மண்ணிலும் வளரக்கூடிய தாவரங்களை வளர்க்கலாம். உதாரணமாக உருளைக்கிழங்கு, முள்ளங்கி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கரும்பு, உளுந்து, பச்சைப்பயிறு, பசுந்தாள் உரப்பயிர்கள்.
# ஒரு விதையிலைத் தாவரங்களைத் தொடர்ந்து இரு விதையிலைத் தாவரங்கள் பயிரிட வேண்டும். உதாரணமாக உருளைக்கிழங்கு, கடுகு, நிலக்கடலை, பயிறு வகைகள், நெல், கோதுமை, கரும்பு, கம்பு அல்லது இவற்றை கலந்தும் விதைக்கலாம்.
# சில வகை பயிர்கள் துர்நாற்றத்தை வெளிப்படுத்தும். சாதாரண பயிர்களைப் பயிரிட்ட பிறகு இப்பயிர்களைப் பயிரிட்டால் சிலவகைப் பூச்சிகள் தாக்குதலில் இருந்து அதைக் கட்டுப்படுத்தலாம்.
# ஊடுபயிர் அல்லாத தனிப் பயிர் செய்த பின் அதிகம் அரிதாள் கட்டைவிடும் பயிர்களைப் பயிர் செய்யலாம். உதாரணமாக கரும்பு, வெள்ளைச்சோளம், பருத்தி, அவரை, தீவனப் பயிர்கள்.