Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உங்களுக்கு வேலை கிடைச்சிட்டு…. ஆன்லைன் மோசடியில் சிக்கிய பட்டதாரி பெண்…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டம் உடையான் பட்டியை சேர்ந்தவர் கீர்த்திகா.  இவர் திருச்சியில் உள்ள என் ஐ டி  கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு வேலைத்தேடி வந்ததோடு  தனது சுய விவரங்களை ஜாப் வலைத்தளத்தில் பதிவெற்றிருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு புதிய எண்ணில் இருந்து இவருக்கு அழைப்பு வந்து தங்களுக்கு பெங்களூரில் இஞ்சினியரிங் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும் அங்கு தங்குமிடம் சாப்பாடு, விண்ணப்ப  கட்டணம் என அனைத்திற்கும் ரூபாய் 3 லச்சத்து 57ஆயிரம் வழங்கவேண்டும் எனவும்  இதனை வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்குமாறு கூறினார்.

வேலை கிடைக்காமல் இருந்த கீர்த்திகாவுக்கு  திடீரென அழைப்பு வந்ததும் அதனை நம்பி பல தவணையில் பணத்தை புரட்டி ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார். இதையடுத்து நீண்ட நாள் ஆகியும் வேலை கிடைத்ததற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாததால் சந்தேகம் அடைந்த கீர்த்திகா  அவர்கள் அழைத்த எண்ணிற்கு அலைபேசி மூலம் அழைத்தபோது ஸ்விட்ச் ஆஃப் என  வந்தது. இதில் ஏமாற்றத்திற்குள்ளான கீர்த்திகா உடனே திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |