சிட்னி தம்பதி மேக்னஸ் மற்றும் டொமினிக் பெர்ரி போன்றோர் தங்களது இரண்டு மகன்கள் உடன் தாரோ உயிரியல் பூங்காவில் சம்பவத்தன்று குடில் ஒன்றில் தங்கி இருந்தனர். அப்போது தான் சிங்கங்களின் கர்ஜிக்கும் சத்தம் கேட்டு அதிகாலை 4 மணிக்கு கண்விழித்து இருக்கின்றனர். பொதுவாக தாரங்கோ உயிரியல் பூங்காவில் மிருகங்களின் அச்சமூட்டும் சத்தங்களையே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க விளம்பரமாக பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள்.
ஆனால் புதன்கிழமை சிங்கங்களின் கர்ஜனை சத்தம் கேட்ட போதும் அவை கூண்டுக்குள் பூட்டப்பட்ட நிலையில் இருப்பதால் பயப்படத் தேவையில்லை என கருதி இருக்கின்றனர். ஆனால் அதிகாலை 6.40 மணியளவில் எச்சரிக்கை மணி அந்த உயிரியல் பூங்காவில் ஒலித்துள்ளது. அது மட்டுமில்லாமல் பூங்கா ஊழியர்கள் விரைந்து சென்று குடில் அமைத்து தங்கி இருந்த மக்களை எழுப்பி சிங்கங்கள் தப்பித்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உடமைகள் பற்றி கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு 30 நொடிகள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிக்கு செல்லுங்கள் என அறிவுறுத்தி இருக்கின்றனர்.
இதனை அடுத்து பெரிய குடும்பத்துடன் சுமார் 50 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக அளித்து சொல்லப்பட்டிருக்கின்றனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பின் சிங்கங்களில் நான்கு சிங்கங்கள் தானாகவே கூண்டிற்குள் சென்றுள்ளது மற்றொன்றை மயக்கம் அடைய செய்யும் துப்பாக்கியால் சுட்டு பிடித்திருக்கின்றனர். இந்த நிலையில் சிங்கங்களுக்கு பயந்து பதுங்கி இருந்த அந்த ஒன்றரை மணி நேரமும் மரண பயத்தை காட்டிய தருணம் என பெர்ரி குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் பூங்கா நிர்வாகம் பேசும் போது பத்து நிமிடங்களில் சிங்கங்களை கூண்டுக்குள் அடைத்திருப்பதாகவும் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.