இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கிடையில் மத்திய அரசு தொடர்ந்து சிலிண்டர் விலையை உயர்த்தி வருகிறது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சிலிண்டரின் விலையை உயர்த்தி வருவது பொருளாதார ரீதியாக சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சிலிண்டருக்கான மானியத் தொகையும் வரவு வைக்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்து வருகிறது.
மத்திய அரசானது சிலிண்டர் விலையில் ஒரு குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்கி வருகிறது. இத்தொகையானது சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கபடுகிறது. இந்த தொகையானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மானியத்தொகை வரவு வைக்கப்படுவதில்லை என்று கூறுகின்றனர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த தொகையயை விரைவில் வரவு வைக்க கோரிக்கைகள் எழுந்தது. இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது சிலிண்டர் மானியத்தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் வாயிலாக மானியத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கீழே சில வழிமுறைகள் பகிரப்படுள்ளன.
# முதலாவதாக www.mylpg.in இணையதளத்துக்கு சென்று, அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டர் நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்.
# இதையடுத்து சைன் இன் (அல்லது) சைன் அப் செய்யவும். முன்பே ஐடி இருந்தால் அதை பதிவிட வேண்டும், இல்லையெனில் ‘new user’ என்ற ஆப்ஷனில் ’View Cylinder Booking History’ என்பதை கிளிக் செய்யவும்.
# இதில் உங்களுக்கான சிலிண்டர் மானிய தொகை வரவு வைக்கப்பட்டு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
# ஒரு வேலை நீங்கள் சிலிண்டர் பதிவு செய்து அதை பெற்ற பின்பும் மானியத்தொகை கிடைக்கவில்லை என்றால் feedback’ என்ற பட்டனை கிளிக் செய்து புகாரை பதிவு செய்யலாம்.