பணம் என்பது மக்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. நாள்தோறும் பணத்தை நோக்கிதான் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட பணத்திற்கும் மொழி உள்ளது உங்களுக்கு தெரியுமா? கணினியை எடுத்துக்கொண்டால் அதுக்கு தெரிந்தது பைனரி மொழி மட்டுமே. அதாவது 0 and 1s மொழியை மட்டுமே கணினி எடுத்துக்கொள்ளும். இதனைப் போலவே ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு மொழி இருப்பது பற்றி இதுவரை உங்களுக்கு தெரியுமா?. தங்களின் தொழிலுக்கு ஏற்றவாறு மொழி உருவாக்கப்படுகிறது. அதனைப் போல தான் பணத்திற்கும் ஒரு மொழி உள்ளது.
ஒவ்வொரு விஷயங்களுக்கும் அசைவுகள் மூலமாகவும் வார்த்தைகள் மூலமாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு மொழி கட்டாயம் இருக்கும். அதனைப் போல தான் பணத்தை ஈர்ப்பதற்கும் மொழி உள்ளது. இதனை மொழி என்றும் நாம் கூறலாம் அல்லது பணத்திற்கான விதிமுறைகள் என்றும் கூறலாம். உலகத்தில் உள்ள பெரும்பாலான பணக்காரர்கள் இந்த மொழியை (விதிமுறைகள்) பயன்படுத்திதான் பணத்தை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர். அப்படி என்ன மொழி என்ற ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். விரைவில் நீங்களும் லட்சாதிபதியாகலாம். இதோ அதற்கான விரிவான விளக்கம்.
பணத்திற்கு தெரிந்த மொழியின் பெயர் “SIM” -Save Inverse Multiplie. பணம் என்ற கருவியை வைத்து தான் இந்த உலகத்தில் வாழ முடியும் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அதனால் அனைவரது வாழ்க்கையிலும் பணத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த பணம் வாழ்க்கையில் ஒரு கருவியாக தான் உள்ளது. அப்படிப்பட்ட கருவியை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் எப்படிக் கையாளுகிறோம் என்ற விஷயத்தில் தான் அது நம்மிடம் அதிக அளவு தங்குகிறதா இல்லை அதனைத் தேடி நாம் ஓடுகிறோமா என்பது உள்ளது.
பணம் சம்பாதிக்கும் அனைவருமே அதை சேமிக்கிறார்களா என்று பார்த்தால், கிடையாது?. ஆனால் சேமிப்பு என்பது மிகவும் முக்கியம். எவ்வளவுதான் குறைந்த அளவு பணம் சம்பாதித்தாலும் அதில் குறைந்தபட்சமாக 10 சதவீதமாவது சேர்த்து வைக்க வேண்டும். அப்படி சேர்த்து வைக்கும் பணத்தை அப்படியே வைத்துக் கொண்டிருக்காமல், அந்த பணத்தை வைத்து ஏதாவது முதலீடு (invest) செய்ய வேண்டும். அதிலும் கவனம் தேவை. அனைவரும் business செய்கிறார்கள் நானும் செய்கிறேன் என்று அவசரப்பட்டு ஒரு செயலைத் தொடங்க கூடாது.
முதலில் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும். அதுபற்றி தெரிந்தவர்களிடம் அறிவுரை கேட்பது மிகவும் நல்லது. அந்தத் தொழிலில் உள்ள சாதக பாதகங்களை நன்றாக அறிந்திருக்க வேண்டும். இதை அனைத்தையும் தெரிந்த பிறகு நீங்கள் இறங்கி முதலீடு செய்து அந்த தொழிலை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும். அப்படி செய்யத் தொடங்கினால் பணம் உங்களிடம் பெருகத் தொடங்கும்.
இதனை ஒருமுறை செய்து விட்டு அப்படியே விட்டு விட கூடாது. தொடர்ந்து உங்கள் வாழ்வில் இதனை செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படி செய்து வந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி. தற்போது உள்ள பணக்காரர்கள் அனைவருமே இதனைப் பின்பற்றுகிறார்கள். அதனால்தான் பணத்தை அதிகமாக அவர்கள் பக்கம் ஈர்க்கிறார்கள். இந்த மொழி தெரிந்தவன் தான் லட்சாதிபதி ஆகிறான். இதுவே பணத்தை ஈர்ப்பதற்கான மொழி. இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் “SIM”என்ற மொழி என்ன சொல்ல வருகிறது என்பது.
இந்த மொழியுடன் RISK என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் ரிஸ்க் எடுப்பவன் தான் தனது வாழ்க்கையில் முன்னேறுகிறான். எதை செய்யத் தொடங்கினாலும் அதில் எந்த பயமும் கொள்ளாமல் செய்ய வேண்டும். நீங்கள் எடுக்கும் ரிஸ்க் தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான முதல் படி. இதனை உங்கள் வாழ்வில் தொடர்ந்து முயற்சி செய்தால் கட்டாயம் இந்த உலகில் நீங்களும் ஒருநாள் லட்சாதிபதியாகலாம். தினம்தோறும் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதிப்பவன் லட்சாதிபதி ஆவதில்லை. அந்தப் பணத்தின் மொழியை தெரிந்து கொண்டு அதனை தன் பக்கம் ஈர்ப்பவன் மட்டுமே லட்சாதிபதி ஆகிறான். இந்த மொழியை நீங்களும் தெரிந்துகொண்டு விரைவில் லட்சாதிபதியாக வாழ்த்துக்கள்….