Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கெல்லாம் ஈவு இரக்கமே இல்லையா?…. நாய் என்றும் பாராமல் கொடூரமாக தாக்கி…. துன்புறுத்திய அவலம்….!!!!

பெங்களூரு கிழக்கு நகரில் மஞ்சுநாதா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இதனிடையே அவரின் வீட்டின் வழியே இரவு நேரத்தில் மூன்று பேர் நடந்து சென்றுள்ளன. அவர்களைப் பார்த்து நாய் குரைத்துள்ளது. இதனால் தங்களை நோக்கி குரைத்து விட்டது என ஆத்திரமடைந்த அந்த மூன்று நபர்களும் சேர்ந்து மரக்கட்டையை எடுத்து சங்கிலியால் கட்டி இருந்த நாயை கொடூரமாக அடித்து தாக்கியுள்ளனர். அதில் வலி பொறுக்க முடியாமல் நாய் தரையில் சுருண்ட படி கத்தி உள்ளது. அவர்களை தடுக்க வந்த நபர் ஒருவர் அந்த காட்சியை வீடியோ எடுத்துள்ளார்.

இருந்தாலும் அந்த நபரை மூன்று பேரும் தள்ளி விட்டனர். பின்னர் தொடர்ந்து அவர்கள் நாயை கடுமையாக தாக்கினர். வீட்டில் உரிமையாளர் வந்ததும் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.இதனை தொடர்ந்து நாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு கவலைக்கிடமாக இருக்கும் நாய்க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் வாயில்லா ஜீவனை இப்படி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |