Categories
சினிமா தமிழ் சினிமா

‘உங்களுக்கெல்லாம் எப்படிப்பா மனசு வருது?’… ரசிகர்களிடம் கோபப்பட்ட குக் வித் கோமாளி புகழ்…!!!

தன்னுடன் செல்பி எடுக்க முயற்சித்த ரசிகர்களை குக் வித் கோமாளி புகழ் கடிந்து கொண்டார்.

தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் நேற்று காலமானதையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த புகழ் நேரில் சென்று விவேக் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது மீண்டும் திரும்பி வந்த புகழுடன் இணைந்து செல்பி புகைப்படம் எடுக்க ரசிகர்கள் முயற்சி செய்தனர் .

அவர்களிடம் ‘நான் டெத்துக்கு வந்திருக்கிறேன். இங்க எப்படிப்பா உங்களுக்கு எல்லாம் போட்டோ எடுக்க மனசு வருது’ என புகழ் கடிந்து கொண்டார். இதன்பிறகு காவலர் ஒருவர் புகழை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். சமீபத்தில் புகழ் திறந்து வைத்த கடையில் அதிகம் கூட்டம் கூடியதால் அந்த கடைக்கு சீல் வைத்து அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |