நடிகர் தனுஷ் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவான் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய 40-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து நடிகர் தனுஷ் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார். அதில் என்னுடைய நலன் விரும்பிகள், ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி எனவும், கடந்த 40 வருடங்களாக எனக்கு பக்க பலமாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் நீங்கள் காட்டும் அன்பால் நான் நெகிழ்ந்து போகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.
🙏🙏🙏 pic.twitter.com/8XZJd41GYl
— Dhanush (@dhanushkraja) July 29, 2022