பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையின் எதிர்காலத்திற்கு இப்போதிலிருந்தே பணத்தை சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். அப்படி சேமிக்க தொடங்குவதுதான் நல்லது. இவ்வாறு .பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிப்பதற்கு பல்வேறு நல்ல திட்டங்கள் இருக்கின்றன அதிலும் முக்கியமாக சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை இந்திய தபால் துறை செயல்பட்டு வருகிறது. இது பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரோ கணக்கு தொடங்க முடியும்.
இந்த திட்டத்தில் பெண் குழந்தையின் 21 வயதில் இரண்டு மடங்கு தொகை கிடைப்பதால் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளது. பெண்ணுடைய 24 வயதின் போதோ அல்லது திருமணத்தின் போதோ இந்த கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எடுத்து விட்டு கணக்கை மூடிவிடலாம். இதில் முதற்கட்டமாக கணக்கை தொடங்கும் போது ரூபாய் 250 செலுத்தினால் போதுமானது. வருடத்திற்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் சேருவதற்கு முதலில் பெண் குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். அது இல்லாத நிலையில் குழந்தைக்கான ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வயது சான்று ஆவணமாக சமர்ப்பிக்கலாம். இது குறித்த விவரங்களை அறிய தபால் நிலையத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.