ஹரி – மேகன் தம்பதிகளை அரண்மனையில் ஏற்க தயாராக இருப்பதாக மகாராணியார் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் அரச குடும்பத்தை சேர்ந்த தம்பதிகள் இளவரசர் ஹாரி – மேகன். இவர்கள் அரண்மனையை விட்டு வெளியேறிய பின்பு அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் இணைந்து ஓப்ராவின் ப்ரோ முன்னெடுத்த நேர்காணல் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்துள்ளனர். மேலும் இந்தப் பேட்டியின் போது அவர்கள் பிரிட்டன் அரச குடும்பதின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைத்ததால் அந்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே அரசகுடும்பம் இனப் பாகுபாடு காட்டுவதாக மேகன் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதனால் பிரிட்டன் மகாராணியார் மேகனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து மகாராணியார் கூறுவதாவது “ஹரி – மேகன் தம்பதியினர் அரச குடும்பத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு திரும்பி வந்தால் அவர்களை நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். மேலும் அவர்கள் இருவரும் முன்வைத்த குற்றச்சாட்டுகளால் நான் கொஞ்சம் வருத்தம் அடைந்துள்ளேன், ஆனால் அவர்களின் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை, எப்போதும் அவர்களுக்கு நான் துணையாக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். இதனால் அரண்மனை வட்டாரங்கள் ஹரி மேகன் தம்பதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.