தெலுங்கு திரையுலகின் பழம் பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா அண்மையில் திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததால் குடும்பத்தினர் ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் அவருக்கு 20 நிமிடங்கள் சி.பி.ஆர் சிகிச்சையளிக்கப்பட்டதை தொடந்து சுயநினைவு திரும்பியது.
எனினும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. மேலும் செயற்கை சுவாச கருவிகள் வாயிலாக அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகர் கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி இறந்தார். நடிகர் கிருஷ்ணா திரை வாழ்கையில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம்வந்த கிருஷ்ணா, இறுதியாக 2016-ம் வருடம் வெளியாகிய ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் மகேஷ்பாபு தன் சமூகவலைதளப்பக்கத்தில் தந்தையின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில் “உங்களது வாழ்க்கை கொண்டாடப்பட்டது. அத்துடன் உங்களது இறப்பு இன்னும் கொண்டாடப்படுகிறது. இதுதான் உங்களது மகத்துவம்.
நீங்கள் உங்களது வாழ்வை பயமின்றி வாழ்ந்தீர்கள். துணிச்சல் மற்றும் தைரியம் உங்களது இயல்பு ஆகும். என் உத்வேகமாக நீங்கள் இருந்தீர்கள். இதுவரையிலும் நான் உணராத வலிமையை தன்னுள் உணர்கிறேன். உங்களின் ஒளி என்று என்றும் என்னுள் பிரகாசிக்கும். மேலும் உங்களை நான் மேலும் பெருமைப்படுத்துவேன். lOVE U அப்பா, மை சூப்பர் ஸ்டார்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இப்பதிவு ரசிகர்களை கண்கலங்க வைத்திருக்கிறது.