Categories
அரசியல்

உங்களை பெரியாளாக்கியதே எம்ஜிஆர்…. இனிமேல் கவனமா பேசுங்க…. இபிஎஸ்-ஓபிஎஸ் எச்சரிக்கை…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ளாட்சித் தேர்தலுக்கு, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டமானது இக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றிருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், “கட்சியில் எவரும் தேர்தலில் இடம்கொடுக்கவில்லை என்று நினைத்து துரோகம் செய்ய நினைக்க வேண்டாம். கட்சியானது எம்ஜிஆர், கோபால்சாமி போன்ற துரோகிகளை  இன்னும் பொறுத்துக் கொள்ள முடியாது என எச்சரித்திருந்தார்.

இதனையடுத்து எம்ஜிஆரை துரோகி என்று துரைமுருகன் கூறியது தற்பொழுது மிகவும் பிரச்சினையாகி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் குறிபிடப்பட்டு இருப்பதாவது “முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தான்  அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதியை முதல்வராக அமர்த்தினார்.

இவ்வாறு இருக்கையில் எம்ஜிஆரை நம்பிக்கை துரோகி எனக் கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். எம்ஜிஆர் தான் திமுக ஆட்சியில் இருப்பதற்கும், கலைஞரை முதல்வராக  இருந்ததற்கும்  காரணமாகும். மேலும் துரைமுருகனை பெரிய ஆள் ஆக்கியதும் எம்ஜிஆர் தான், எனவே இவர் துரோகி என கூறியது துரோகத்தின் எல்லை ஆகும். மேலும் இனிமேல் துரைமுருகன் மிகவும் எச்சரிக்கையாக பேசவேண்டும்” என அறிவுறுத்தி உள்ளனர்

Categories

Tech |