Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்களோட செல்போன் தொலைஞ்சுபோச்சா…? உடனே இதைப் பண்ணுங்க… இல்லனா உங்க பணத்திற்கு ஆபத்து…!!

உங்களது ஸ்மார்ட் போன் தொலைந்துவிட்டால் அதில் உள்ள தகவல்கள் மற்றும் பணம் போன்றவை திருட படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இதை தெரிந்து கொள்வோம்.

இப்போதெல்லாம் தனிமனிதரின் அனைத்து விவரங்களும் ஒரு செல்போனுக்குள் அடங்கி விடுகிறது. அந்த அளவுக்கு செல்போன் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தனிநபர் தொடர்பான அனைத்து விவரங்களும் செல்போனில் சேமித்து வைக்கப்படுகின்றது. மொபைல் நம்பர், ஆதார், வங்கிக் கணக்கு எண், PIN நம்பர், இண்டர்நெட் பேங்கிங், மொபைல் வாலெட் போன்றவை ஸ்மார்ட் போன் மூலமாக திருடப்படும் வாய்ப்புள்ளது.

மிக முக்கியமாக உங்களது வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்தும் திருடு போவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் தொலைந்தவுடன் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் சிம் கார்டு வைத்திருக்கும் மொபைல் ஆபரேட்டர் அழைத்து சிம்கார்டை செயலிழக்க செய்ய வேண்டும். அதன் பின்னர் நீங்கள் விரும்பினால் அதை சிம்கார்டை வாங்கிக்கொள்ள முடியும்.

அதேபோல உங்களது ஸ்மார்ட் போன்களில் இண்டர்நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்தி வந்தால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு புகார் அளித்து இன்டர்நெட் சேவையை தற்காலிகமாகக் நிறுத்த செய்ய வேண்டும்.

ஸ்மார்ட்போனில் உங்களது பாஸ்வேர்டு தெரியாமல் இருந்தாலும், மொபைல் நம்பருக்கு ஓடிபி வருவதன் மூலம் அதனை லாகின் செய்து கொள்ள முடியும். எனவே இன்டர்நெட் பாங்கிங் சேவையை முதலில் நிறுத்துவது மிகவும் நல்லது.

இவற்றை செய்த பின்னரும் ஏதேனும் தவறு நடக்க வாய்ப்பு இருப்பதாக நீங்கள் நினைத்தால் உடனடியாக வங்கிக்கு சென்று, வங்கியுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை மாற்றி விட வேண்டும்.

உங்களது ஸ்மார்ட் போனில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை நீங்கள் பயன்படுத்தி வந்தால் ஸ்மார்ட்போன் திருடு போன உடனே அருகில் உள்ள இன்டர்நெட் சென்டருக்கு சென்று உங்களது சமூக வலைதள கணக்கை தற்காலிகமாக முடக்கி வைக்க வேண்டும். இல்லையெனில் அதிலுள்ள பாஸ்வேர்டை நீங்கள் மாற்றிக் கொள்வது மிகவும் நல்லது .

Categories

Tech |